வெள்ளத்தில் சிக்கிய கிராமத்தில் இருந்து அரை நாள் போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்ட தாய், சேய்

ஒடிசா மாநிலத்தில் உள்ள நயாகர் அருகே உள்ள சாமூண்டா கிராமம் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணிப் பெண்ணை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கிய கிராமத்தில் இருந்து அரை நாள் போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்ட தாய், சேய்
x
ஒடிசா மாநிலத்தில் உள்ள நயாகர் அருகே உள்ள சாமூண்டா கிராமம் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த  கர்ப்பிணிப் பெண்ணை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். சாமூண்டா கிராமத்தில் பேறுகாலத்திற்காக ஒரு பெண் வலியால் துடிப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை படகில் சென்ற மருத்துவ மற்றும் தீயணைப்புக் குழுவினர் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்க உதவி உள்ளனர். பின்னர் தாயையும், சேயையும் கடும் போராட்டத்திற்கு பின்னர் மோகாநதி ஆற்று வெள்ளத்தை கடந்த பத்திரமாக மீட்டு வந்தனர். பின்னர் மருத்துவமனையில் தாயும், சேயும் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பணி மிகவும் சவாலாக இருந்ததாக உதவி தீயணைப்புத்துறை அலுவலர் தாக்கூர் பிரசாத் தலாய் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்