இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்

பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் 31 மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனோவை கருத்தில் கொண்டு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை மாநில அரசுகள் தள்ளி வைக்கலாம் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். ஆனால், பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களை மாநில அரசுகள் தேர்ச்சி பெற வைக்க முடியாது என்றும்  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்