"வெளிநாட்டில் உள்ள இந்திய மாணவர்களுக்கு ஜேஇஇ போல், நீட் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்" - உச்சநீதிமன்றம்
ஆன்லைன் மூலம் ஜேஇஇ தேர்வு எழுத வாய்ப்பளித்தது போல் அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வை எழுதவும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் ஜேஇஇ தேர்வு எழுத வாய்ப்பளித்தது போல், அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வை எழுதவும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய கிழக்காசிய நாடுகளில் வசிக்கும் 4 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு தேர்வு மையம் ஏற்படுத்த வேண்டும் அல்லது நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரி கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் அசிஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, மாணவர்கள் இந்தியா வர, வந்தே பாரத் திட்டம் மூலம் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மாணவர்கள், தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க அந்தந்த மாநில அரசுகளை அணுகுமாறும் அறிவுறுத்தி உள்ளது.
Next Story