வேலைப்பளு காரணமாக சுகாதாரத்துறை அதிகாரி தற்கொலை - கர்நாடக மாநிலத்தில் நடந்த சோக சம்பவம்
கர்நாடகாவில் வேலைப்பளு காரணமாக சுகாதாரத்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தின் நஞ்சன்கூடு தாலுகாவில் தலைமை சுகாதாரத் துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் மருத்துவர் நாகேந்திரா. கொரோனா தொற்று ஆரம்பித்த நாளில் இருந்தே இவருக்கு விடுமுறை இல்லாமல் தொடர்ச்சியாக வேலை இருந்து வந்ததால் மனஉளைச்சலில் இருந்துள்ளார். மேலும் கொரோனா பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், தன் குடும்பத்தினரிடம் இருந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் கடும் மன உளைச்சலில் தவித்து வந்த அவர், தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மக்கள் நலனின் அக்கறை கொண்ட அதிகாரி என பெயர் எடுத்த நாகேந்திரா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே உயிரிழந்த நாகேந்திராவின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story