ஜெனரல் மோட்டார்சை வாங்க திட்டமிட்ட சீனா - சீன முதலீடுகளுக்கு அனுமதி வழங்காத மத்திய அரசு

புனே அருகே அமைந்துள்ள ஜெனரல் மோட்டர்ஸ் அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையை சீனாவை சேந்த கிரெட் வால் மோட்டர்ஸ் என்ற நிறுவனம் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜெனரல் மோட்டார்சை வாங்க திட்டமிட்ட சீனா - சீன முதலீடுகளுக்கு அனுமதி வழங்காத மத்திய அரசு
x
புனே அருகே அமைந்துள்ள ஜெனரல் மோட்டர்ஸ்  அமெரிக்க  கார் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையை சீனாவை சேந்த கிரெட் வால் மோட்டர்ஸ் என்ற நிறுவனம் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த  தொழிற்சாலையில் ஹாவெல் ரக எஸ்.யு.வி கார்களையும், மின்சார வாகனங்களையும் தயாரிக்க சீன நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தியா சீனா எல்லை பிரச்சனை வெடித்த பின், அண்டை நாடுகளில் இருந்து வரும் புதிய முதலீடுகளுக்கு மத்திய அரசு பல புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளதால் , இந்த  தொழிற்சாலையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. சீன முதலீடுகளுக்கு கடந்த சில மாதங்களாக மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இது வரை சீனாவில் இருந்து சுமார் 200 புதிய முதலீட்டு திட்டங்கள் அனுமதிக்காக, நிலுவையில் உள்ளன. இந்த கார் தொழிற்சாலை  விற்பனைக்கும் இது வரை அனுமதி கிடைக்கவில்லை.

Next Story

மேலும் செய்திகள்