கேரளா: கொரோனாவில் இருந்து மீண்ட 103 வயது முதியவர்

கேரளாவில் 103 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.
கேரளா: கொரோனாவில் இருந்து மீண்ட 103 வயது முதியவர்
x
கேரளாவில் 103 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். ஆலுவா பகுதியை சேர்ந்த பரீத் என்ற முதியவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கொரோனாவில் இருந்து மீண்ட அவரை, மருத்துவர்கள் மலர்கொத்து கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

"காங்கிரஸ் தலைமை பதவிக்கு வர விருப்பம் இல்லை" - பிரியங்கா காந்தி 

காங்கிரஸ் தலைவராக, தங்கள் குடும்பத்தை சேராத ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற ராகுல்காந்தி கருத்தில் தமக்கு உடன்பாடு உள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கட்சி தனக்கான பாதையை வகுத்துக் கொள்ளும் என நம்புவதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். தற்போதைய ஊடகங்களின் நிலைப்பாட்டை புரிந்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி எடுத்துக் கொண்ட கால அவகாசத்திற்குள், போதுமான சேதத்தை அவை காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடையே ஏற்படுத்திவிட்டதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை விசாரணை மற்றும் ஊடக விவாதங்களால் தமது குழந்தைகள் மிகப் பெரிய தடங்கல்களை சந்தித்து வருவதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

மழையால் மலப்பிரபா ஆற்றில் வெள்ளம் - கிராமங்களுக்குள் புகுந்த மழை வெள்ளம் 

கர்நாடகா மாநிலம் கடக்கில் மலப்பிரபா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் பல கிராமங்களை சூழ்ந்ததால் மக்கள் மிகுந்த  சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெள்ள பாதிப்பை தொடர்ந்து, கிராமமக்கள் அனைவரும் அங்கிருந்து வெறியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ராணி அவந்திபாய் சாகர் அணை திறப்பு  -மதகுகளில் இருந்து சீறி பாய்ந்த தண்ணீர் 

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபால்பூரில் கனமழையால், ராணி அவந்திபாய் சாகர் அணை திறக்கப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக செந்நிறத்தில் தண்ணீர் சீறிப் பாய்ந்தது. அணை பகுதியில் திரண்ட  பொதுமக்கள் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்ததோடு மட்டுமின்றி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

தலைநகர் டெல்லியில் பரவலாக மழை - மழையால் குளிர்ந்த சீதோஷண நிலை 

இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையில் மழை பெய்தது. ராஜாஜி மார்க், கிரிஷி பவன் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் தலைநகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷண நிலை நிலவி வருகிறது. அடுத்த இரு தினங்களுக்கு மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ஊரடங்கால் சுற்றுலா பயணிகளுக்கு தடை - குதிரை சவாரி தொழில்முறை வீரர்கள் பாதிப்பு 

இமாச்சலபிரதேசம் சிம்லாவில் கொரோனா ஊரடங்கால் குதிரை சவாரி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக வருவாய் இல்லாமல் பரிதவிப்பதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததால் நகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 16 குதிரைகளின் எண்ணிக்கை தற்போது நான்காக குறைக்கப்பட்டிருப்பதாக கவலை கூறுகிறார்கள். 

Next Story

மேலும் செய்திகள்