தனித்துவமான மலர் வளர்ப்பு பண்ணை - பொழுது போக்கு தோட்டமாக மாற்ற திட்டம்
ஜம்மு,காஷ்மீர் மாநிலத்தை ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
ஜம்மு,காஷ்மீர் மாநிலத்தை ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்நிலையில் அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக லேக மணாலி நெடுஞ் சாலையில் உள்ள திக்சே என்ற கிராமத்தில் உள்ள மலர் பண்ணையை, தனித்துவமான மலர் வளர்ப்பு பண்ணையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிளாடியோலஸ், லிலியம், பெட்டூனியா, சாமந்தி, டாக்லியா மற்றும் சூரியகாந்தி ஆகிய மலர் வகைகள் இந்த பண்ணையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. பொது மக்கள் பொழுது போக்கும் வகையில் இந்த பண்ணைடிய விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் தோட்டக்கலைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான கூடுதல் நிதி அளிக்கப்படும் என லதாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் ஆர்.கே.மாத்தூர் தெரிவித்துள்ளார்.
Next Story