திவாலான நிறுவனங்களிடம் இருந்த ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகள் பயன்படுத்தும் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் - மத்திய அரசு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
திவாலான டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்த ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகளை தற்போது பயன்படுத்தும் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
திவாலான டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்த ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகளை தற்போது பயன்படுத்தும் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆர் காம், ஏர்செல் மற்றும் வீடியோகான் ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் திவாலானதையடுத்து , அவற்றின் வசம் இருந்த ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகளை ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் மூலம் பெற்று பயன்படுத்தி வருகின்றன. ஆர்.காம் நிறுவனத்திடம் இருந்த அலைகற்றைகளில் சுமார் 38 சதவீதத்தை தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
Next Story