டெல்லியில் அதிகாலை முதல் பெய்து வரும் மழை
டெல்லியில் அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
ராஜ்பாத், இந்தியா கேட், தீன் மூர்த்தி மார்க், மின்டோ சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில், நனைந்தபடி மக்கள் சென்றனர். மின்டோ கேட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பாலத்தின் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியது. அந்த வழியாக சென்ற பேருந்து ஒன்று பேருந்தில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. இதை அறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேருந்து மீது ஏணியை வைத்து பயணிகளை மீட்டனர்.
தொடர் மழை... வீதிகளில் தேங்கிய மழைநீர்...மழையில் செல்லப் பிராணியுடன் சிறுவர்கள் உற்சாகம்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், கொட்டும் மழையில் சிறுவர்கள் செல்லப் பிராணியுடன் நனைந்து மகிழும் காட்சி வெளியாகி உள்ளது. நொய்டாவின் பத்தாவது பிரிவு பகுதியில், சாரலும், தூறலுமாக மழை பெய்து வருகிறது. வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. பெருமழைக்கு பிறகு சன்னமாக விழும் மழைத் துளியை ரசித்தபடி, செல்லப் பிராணியுடன் சிறுவர்கள் நனைந்து மகிழ்ந்தனர்.
குட்டை குழிக்குள் விழுந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு - மாபியா கும்பல் தோண்டிய குழிகள் என புகார்
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில், சட்ட விரோதமாக தோண்டிய குட்டை குழிக்குள் விழுந்த 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டிய குழிக்குள் விழுந்த 3 சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. குழிகளை மூடாததும், சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி கொள்ளையில் ஈடுபட்ட மாபியா கும்பலுக்கு, போலீசார் ஆதரவாக செயல்படுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
Next Story