24 மணி நேரத்தில் 22,252 பேருக்கு தொற்று - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின் படி, இந்தியாவில் இதுவரை மொத்தம் 7 லட்சத்து 19 ஆயிரத்து 665 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 947 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை இந்தியாவில் 20 ஆயிரத்து 160 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 987 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 262 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர். டெல்லியில் ஒரு லட்சத்து 823 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 72 ஆயிரத்து 88 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர்.
குஜராத்தில் 36 ஆயிரத்து 772 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26 ஆயிரத்து 315 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர். உத்தர பிரதேசத்தில் இதுவரை 28 ஆயிரத்து 636 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 19 ஆயிரத்து 109 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர்.
Next Story