பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை
ஜூன் 23-ஆம் தேதி நடைபெறவிருந்த பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டத்துக்கும், அது தொடர்பான நிகழ்வுகளுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஒடிசா விகாஸ் பரிசத் என்ற பொது நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, ஜூன் 23-ஆம் தேதி நடைபெறவிருந்த பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டத்துக்கும், அதுதொடர்பான நிகழ்வுக்கும் தடை விதித்தது. தேரோட்டத்துக்கு அனுமதி அளித்தால், ஜெகநாதர் தங்களை மன்னித்து அருள மாட்டார் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். பொதுமக்களின் நலனையும், பாதுகாப்பையும் கருதி நிகழாண்டு பூரி தேரோட்ட நிகழ்வை அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Next Story