சூரிய கிரகணம் - மூடப்படும் ஏழுமலையான் கோவில் - ஜூன் 21 நள்ளிரவு 1 முதல் மதியம் 2.30 வரை மூடல்
வரும் 21ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்வதை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவில் பதின்மூன்றரை மணிநேரம் மூடப்படுகிறது.
21ம் தேதி காலை 10 மணி18 நிமிடத்தில் இருந்து மதியம் 1 மணி 38 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் முன்கூட்டியே 21-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டு, மதியம் 2.30 மணிக்கு திறக்கப்படும் என திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் தெரிவித்துள்ளார். பின்னர் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.
Next Story