100 வயது மூதாட்டியை கட்டிலோடு இழுத்து சென்ற மகள் - வங்கியில் பணம் எடுக்க நேரில் வர சொன்னதால் அவலம்

ஒடிசாவில், உதவித்தொகையை வங்கி கணக்கில் இருந்து எடுக்க நேரில் வரச் சொன்னதால், 100 வயது தாண்டிய மூதாட்டியை கட்டிலோடு மகள் வங்கிக்கு இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
100 வயது மூதாட்டியை கட்டிலோடு இழுத்து சென்ற மகள் - வங்கியில் பணம் எடுக்க நேரில் வர சொன்னதால் அவலம்
x
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மாதம் 500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அப்படி உதவித் தொகை பெறுபவர்களில் நவுபாரா மாவட்டம் பர்கோன் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி லாபே பாகல் என்பவரும் ஒருவர். இந்த பணத்தை பெற மூதாட்டியை நேரில் அழைத்துவர வங்கி மேலாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் 100 வயது தாண்டிய அந்த மூதாட்டியை அவரது மகள் கட்டிலோடு இழுத்து சென்றார். இந்த உருக்கமான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்