இந்தியாவில் களமிறங்கும் வெளிநாட்டு மருந்துகள் - மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து எது?
இந்திய தயாரிப்பான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைக்கு போட்டியாக வெளிநாட்டு மருந்துகள் இந்தியாவிற்கு வரத் தொடங்கியுள்ளன.
இந்திய தயாரிப்பான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைக்கு போட்டியாக வெளிநாட்டு மருந்துகள் இந்தியாவிற்கு வரத் தொடங்கியுள்ளன.
உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றுக்கு இந்தியாவில், சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது. கொரோனா தொற்றினை குணமாக்க, மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் சோதனைஅடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 100 மாத்திரைகள் வெறும் 63 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த மாத்திரைகள், நோயாளிகளுக்கு ஓரளவு எதிர்ப்பு சக்தியை கொடுப்பதால், கொரோனா சிகிச்சைக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில், இந்திய தயாரிப்பான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையின் சோதனை அளவிலான செயல்பாடுகளை நிறுத்துவதாக திடீரென அறிவித்த உலக சுகாதார நிறுவனம், பின்னர் தனது முடிவினை மாற்றிக் கொண்டது. அதேநேரத்தில், இந்தியாவில் சோதனை முயற்சிகளில் சில வெளிநாட்டு மருந்துகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை விட, அமெரிக்க தயாரிப்பான ரெம் டிசிவர் (Remdisiver ) போன்ற மருந்துகள், பல மடங்கு பலன் அளிக்கக் கூடியது என்று மருத்துவர்கள் மத்தியில் கருத்து உருவாகியுள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனைக்கு உலக சுகாதார நிறுவனம் முதலில் தடை விதித்தாலும், இந்தியா தொடர்ச்சியாக அதில் சோதனைகள் நடத்திய அனுபவம் உள்ளதால், சிகிச்சையை தொடர்ந்து வருகிறது. அதே நேரத்தில், இந்திய தயாரிப்போ அல்லது வெளிநாட்டு மருந்துகளோ, ஆராய்ச்சி முடிவிற்குப் பின்னர் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை விலை அதிகமாக இருந்தாலும் மக்களுக்கு உடனடியாக கிடைக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை, ரெம்டிசிவர் மருந்து மற்றும் பிளாஸ்மா சிகிச்சை என எல்லா முறைகளுமே சோதனை கட்டத்தில் உள்ள நிலையில், மருத்துவ ஆராய்ச்சி கழக பரிந்துரைக்கு பின்னரே பாதுகாப்பான மருந்து குறித்து சொல்ல முடியும் என்பதே மருத்துவர்களின் இறுதி கருத்தாக உள்ளது.
Next Story