பி எம் கேர்ஸ் நிதி தொடர்பான வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
பி எம் கேர்ஸ் நிதியின் விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வழங்க உத்தரவிடக் கோரிய மனு மீது மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பி எம் கேர்ஸ் நிதியின் விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வழங்க உத்தரவிடக் கோரிய மனு மீது மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சுரேந்தர் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா அமர்வு, பிரதமர் அலுவலகத்தின் மத்திய பொது தகவல் அதிகாரி பதிலளிக்க உத்தரவிட்டார்.
Next Story