உயிரிழந்தவரின் சடலத்தை சவக்குழியில் தள்ளப்பட்ட விவகாரம் 3 பேர் பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் சவக்குழியில் தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலத்தை சவக்குழியில் தள்ளப்பட்ட விவகாரம்   3 பேர் பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு
x
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர், புதுச்சேரியில் உள் உறவினர் வீட்டுக்கு வந்தபோது கொரோனாவால் உயிரிழந்தார்.  இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய வந்த ஊழியர்கள், குழிக்குள் சடலத்தை கயிறு கட்டி இறக்காமல் தள்ளி விட்டனர். கொரோனா தொற்று பாதித்தவரின் உடலை அலட்சியமாக சவக்குழியில் வீசி செல்வதாக வீடியோக்கள் இணையத்தில் பரவின. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சவக்குழியில் உடல் வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய உள்ளாட்சித்துறை ஊழியர்கள் இருவர், சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் என மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். விசாரணை அறிக்கை வந்த பிறகு சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உடல் நல்லடக்கத்தில் அவமரியாதை நிகழ்ந்தது வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்