கொரோனாவில் இருந்து குணமடைந்த கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்தி நெகிழ வைத்த அதிகாரிகள்
பெங்களூரு அருகே உறவினர்கள் அச்சப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த கர்ப்பிணிக்கு அதிகாரிகளே வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அருகே உறவினர்கள் அச்சப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த கர்ப்பிணிக்கு அதிகாரிகளே வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒசக்கோட்டை வட்டாட்சியர் கீதா தலைமையில் வருவாய் அதிகாரிகள், மருத்துவக்குழுவினர், காவல்துறையினர் உட்பட அரசு அதிகாரிகளே 8 மாத கர்ப்பிணிக்கு வளை பூட்டி, மலர் தூவி, பரிசுகள் வழங்கி, அந்த பெண்ணை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
Next Story