4ஆம் கட்ட ஊரடங்கில் கேரளாவில் சில கட்டுப்பாடுகள் தளர்வு

கேரளா மாநிலத்தின் மாவட்டங்களுக்குள் நிபந்தனைகளுடன் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
x
கேரளாவில் நான்காம் கட்ட ஊரடங்கில், அந்த மாநில அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன் படி, மாவட்டங்களுக்குள்  பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 50 சதவீதம் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் நின்று பயணம் செய்ய  அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மாவட்டத்தை விட்டு வெளியே செல்லவும் அனுமதி உண்டு என்றும்,  ஆனால் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. படகுகளில் 33 சதவீத கட்டண உயர்வு அமல் எ​ன்றும், கட்டண உயர்வு கொரோனா காலத்திற்காக மட்டுமே வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் டாக்சிகளை ஒரு பயணியுடன் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்