உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 21 புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரு சரக்கு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் மேற்கொண்ட 24 புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஊரடங்கு காரணமாக வேலையிழந்த புலம் பெயர்ந்து தொழிலாளர்கள், நடந்தோ, சரக்கு லாரிகள் உதவியுடன், சொந்த ஊருக்கு பயணம் செய்கின்றனர். அந்த வரிசையில், வெளிமாநிலங்களில் சிக்கி தவித்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, லாரியில் மொத்தமாக பயணித்தனர். அவர்களை ஏற்றி வந்த லாரி, உத்தரப்பிரதேச மாநிலம் அவுரியா பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே 24 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயம் அடைந்த 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவுரங்காபாத் ரயில் விபத்தின் சுவடு மறைவதற்குள், மற்றொரு விபத்தில் 24 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story