தொழிற்சாலைகள் பாதுகாப்பு வழிகாட்டுதல் - மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு

ஊரடங்கு தளர்வுக்கு பின் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கும்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தொழிற்சாலைகள் பாதுகாப்பு வழிகாட்டுதல் - மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு
x
விசாகப்பட்டினம் சம்பவத்தை அடுத்து, தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு முறைகளையும் உறுதிசெய்த பின்னரே, ஆலைகளின் சோதனை ஓட்டத்தை அல்லது உற்பத்தியை தொடங்க வேண்டும் என கூறியுள்ளது. தொழிற்சாலைகளின் பொதுவான பகுதிகளில் 24 மணி நேரமும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தி உள்ளது. தொழிலாளர்களின் தங்குமிடங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் உற்பத்தி இலக்கை எட்ட அவசரம் வேண்டாம் என்றும் கூறியுள்ளது. முதல் வாரத்தில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவும் உள்துறை அமைச்சகம்  வலியுறுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்