கொரோனா பரிசோதனைகளுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை
கொரோனா தொற்றை கண்டறிய ஆர்.டி-பிசிஆர் சோதனையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 33 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8 ஆயிரத்து 373 பேர் குணமடைந்துள்ளனர்
கடந்த 24 மணி நேரத்தில் 67 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 75 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தவர்களின் விகிதம், 25 புள்ளி 19 சதவீதமாக உள்ளதாகவும், இறப்பு விகிதம் 3 புள்ளி 2 சதவீதமாக உள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் இரட்டிப்பு விகிதம் 11 நாட்களாக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
சோதனை மற்றும் சிகிச்சை நெறிமுறையை பொருத்தவரை ஆர்டி-பிசிஆர் சோதனையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Next Story