ஏப்ரல் 1 - அன்று 470 ஆக இருந்த ரத்தமாதிரிகளின் எண்ணிக்கை ஏப்ரல்29 ல் 3,295 ஆக உயர்வு
டெல்லியில் சோதனைகளுக்காக நிலுவையில் உள்ள ரத்தமாதிரிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 1 ஆம் தேதியன்று 470 ஆக இருந்த ரத்தமாதிரிகளின் எண்ணிக்கை, ஏப்ரல் 29 வரை 3 ஆயிரத்து 295 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கொரோனா உள்ளதா என அடையாளம் காண்பது, அவர்களின் தொடர்புகளைக் கண்டறிதல் மற்றும் ஒரு நோயாளி குணமடைந்துவிட்டாரா என்பதை தீர்மானிப்பது மற்றும், ரத்த மாதிரி எடுத்த நபர்களை வீட்டிற்கு செல்ல அனுமதிக்கலாமா இல்லையா. என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் குழப்பம் நீடித்து வருகிறது.
டெல்லியில் 20 ஆய்வகங்கள் உள்ள நிலையில் அரசு ஆய்வகங்கள் 8, மற்றும் தனியார் ஆய்வகங்களுக்கு 12 - க்கு கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் இருந்து சில ரத்த மாதிரிகள் நொய்டாவில் உள்ள என்ஐபி - தேசிய உயிரியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படுகின்றன. இங்கு தானியங்கி இயந்திரம் மூலம், ஒரு நாளைக்கு 1,000 சோதனைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால், டெல்லி சுகாதார செயலாளர் நேற்று பிறப்பித்த உத்தரவின்படி, கடந்த 15 நாட்களில் ரத்த மாதிரிகள் சோதனை முடிவுகளை என்ஐபி, விரைவாக வெளியிடவில்லை. மே 3 வரை எந்த மாதிரியும் என்ஐபிக்கு அனுப்பப்படவில்லை என்பதை அனைத்து துணை ஆணையங்ளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரத்த மாதிரிகள், ஒரு நாளுக்குள் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட செய்ய வேண்டும் என, சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story