"கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறது" - முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பெருமிதம்

கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதாக முப்படைகளின் தலை​மை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறது - முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பெருமிதம்
x
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய ராணுவ வீரர்களை, கொரோனா வைரசிடம் இருந்து காக்க வேண்டியது அவசியம் என்றும் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் கூறினார். பொறுமையும், ஒழுக்கமும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த உதவிடும் என்றும் பிபின் ராவத் தெரிவித்தார்.  ஆரோக்கிய சேது செயலியை, நாட்டு மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை கண்டறிந்து, அதனிடம் இருந்து நாம் தற்காத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். மக்களை காக்கும் பணியில், ராணுவ வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும்,  சேவையை தொடர்வர் என்றும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்