பெங்களூருவில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதம்

பெங்களூரு அருகே கொரோனா பரிசோதனை செய்வதற்காக சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வன்முறையில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு நகரின் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் ஒன்றான பாடராயனபுராவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூருவில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், பொதுமக்கள்  வாக்குவாதம்
x
பெங்களூரு நகரின் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் ஒன்றான பாடராயனபுராவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த, 58 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு, 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், மூன்றாம் நபராக தொடர்பில் இருந்த சுமார் 300 பேருக்கு, பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் வந்தனர். ஆனால், தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள, சிலர் மறுத்ததுடன், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், தடுப்புகளை உடைத்து, பரிசோதனைக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை சேதப்படுத்தினர். இதை தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை, போலீசார் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். பின்னர், தகவலறிந்து வந்த காவல் இணை ஆணையர், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்குமாறு, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்