ஊரடங்கை மீறி நடைபெற்ற திருவிழா - வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவை மீறி கோவில் திருவிழா நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி கோவில் திருவிழா நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராவூர் கிராமத்தில் உள்ள சித்தலிங்கேஸ்வரர் கோவிலில் ஏராளமான மக்கள் ஒன்றுகூடி சித்திரை திருவிழாவை கொண்டாடினர். அதை தொடர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்து வீதி வீதியாக சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், திருவிழா ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரசால், முதல் உயிரிழப்பு ஏற்பட்டது இந்த மாவட்டத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story