"10 நாட்களில் 170 டன் மருந்து பொருட்கள்"- நெருக்கடியிலும் சேவையாற்றும் ஏர் இந்தியா
ஏர்-இந்தியா விமான நிறுவனம் கடந்த 10 நாட்களில் 170 டன் மருந்து பொருட்களை கையாண்டுள்ளது.
ஏர்-இந்தியா விமான நிறுவனம் கடந்த 10 நாட்களில் 170 டன் மருந்து பொருட்களை கையாண்டுள்ளது. வரும் வாரத்தில் மேலும் 300 டன் மருந்து பொருட்களை கையாள உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஹாங்காங் மற்றும் ஷாங்காய் நகரங்களில் இருந்து மருந்துவ உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளது. உள்நாட்டில் உதான் சேவைகளை அளிக்கும் விமானங்களையும் இந்த பணிக்காக ஏர்-இந்தியா பயன்படுத்தி உள்ளது. இதற்காக ஏர் இந்தியா ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக விமான துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
Next Story