மக்கள் நடமாட்டமின்றி அமைதியுடன் காணப்பட்ட சாலைகள் - வீடுகளில் முடங்கிய மக்கள்
கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள நாடே முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, இந்தியா முழுமைக்கும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
மக்கள் நடமாட்டமின்றி அமைதியுடன் காணப்பட்ட சாலைகள்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், போலீசார் சாலைகளில் தடுப்புகளை அமைத்து, வெளியில் நடமாடுவோரை, வீட்டிற்கு செல்லும் படி அறிவுறுத்தினர். அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும், வாகனங்களை மட்டும் அனுமதித்த காவல்துறை, மற்ற வாகனங்கள் செல்ல தடை விதித்தனர்.
வாரணாசி அமைதியோடு காட்சியளித்தது
நவராத்திரியின் முதல் நாளான இன்று, வாரணாசி அமைதியோடு காட்சியளித்தது. அங்குள்ள பிரசித்த பெற்ற கோவில்களின் கதவுகள் மூடப்பட்டுள்ளன.
டெல்லியிலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள்
டெல்லியிலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது. எல்லைப்பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீநகரில் உள்ள சந்தைகளும் மூடப்பட்டுள்ளன
144 தடை உத்தரவால், காஷ்மீரின் வீதிகள் அமைதியுடன் காட்சியளித்தன. ஸ்ரீநகரில் உள்ள சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.
Next Story