நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பவன் ஜல்லாத்துக்கு குவியும் பாராட்டுகள்...
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள சிறையில் பணியில் ஈடுபட்டு வரும் பவன் ஜல்லாத் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியில் ஈடுபட்டவர்.
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நாளில் இருந்தே அடிபட்ட பெயர் பவன் ஜல்லாத்.
* உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள சிறையில் பணியில் ஈடுபட்டு வரும் பவன் ஜல்லாத் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியில் ஈடுபட்டவர்.
* ஏற்கனவே திகார் சிறையில் இதே பணியை செய்பவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் சிறை நிர்வாகம் பவன் ஜல்லாத்தை வரவழைத்தது. இவரது தந்தை பாபு ஜல்லாத், தாத்தா கல்லு ஜல்லாத் ஆகியோரும் தூக்கிலிடும் பணியை செய்தவர்களே..
* 3வது தலைமுறையாக பவன் ஜல்லாத் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இதுவரை நேரடியாக இவர் யாரையும் தூக்கிலிட்டதில்லையாம். அவரது தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் தூக்கிலிடும் பணியில் ஈடுபட்ட போது அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார் பவன் ஜல்லாத்.
* ஆனால் இப்போது நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்டதே இவருக்கு முதல் பணி. இந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாததால் இவருக்கு வேலை வாய்ப்பும் இல்லாமல் சிறையில் சாதாரண பணியில் இருந்துள்ளார். மாதம் 5 ஆயிரம் ரூபாய் வருமானத்தில் வறுமையில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
* மகளுக்கு திருமணத்தை நடத்த திட்டமிட்ட அவருக்கு, போதிய பணவசதி இல்லாததால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் நிர்பயா வழக்கில் இவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. ஒருவரை தூக்கிலிட 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக கிடைக்கும் என்பதால் இதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார் பவன் ஜல்லாத்.
* நிர்பயா சம்பவத்தை கேட்டபோதே தனக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறும் அவர், அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டது மனநிறைவை தந்ததாகவும் கூறியிருக்கிறார்.
Next Story