கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விவரங்களை மக்கள் அறிய மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கேரள அரசு மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விவரங்களை மக்கள் அறிய மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்
x
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கேரள அரசு மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பரப்பபடும் வதந்திகளால் ஏற்படும் தேவையற்ற அச்சத்தை போக்கும் வகையில் இந்த நடவடிக்கையை கேரள அரசு எடுத்துள்ளது.  ஜி.ஓ.கே என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மொபைல் அப்ளிகேஷன்  செயல்பாட்டை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இதை டௌன்லோடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்