திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை முன்னிட்டு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரலாம் என்பதால் அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து
x
திருமலையில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கோடை விடுமுறையை முன்னிட்டு 1 வயது குழந்தையுடன் பெற்றோர்,  மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு  தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். பக்தர்கள் காலணி அணியாமல் செல்லும் பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை  கூலிங் பெயிண்ட் அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் செம்பு மற்றும் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வர வேண்டும் என்றும்,   திருமலையில் உள்ள  தண்ணீர் சுத்திகரிப்பு மையங்கள்  தண்ணீரை பிடித்து கொள்ளலாம் என்றும்  அவர் தெரிவித்தார். 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இந்தியா மட்டுமன்றி  வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா வைரஸ் காரணமாக டிக்கெட்டுக்களை வேறு நாட்களுக்கு மாற்றிக்கொள்ளவோ அல்லது  ரத்து செய்வது தொடர்பான  வசதியை  அடுத்த சில நாட்களில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தர்மா ரெட்டி  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்