லாரி பழுதுபார்க்கும் வேலை செய்யும் பெண் தொழிலாளி - ஆண்களுக்கு நிகராக வேலை செய்யும் 45 வயது பெண்
மத்தியபிரதேச மாநிலம் மன்சூரில் 45 வயது பெண் ஒருவர் லாரி பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார்.
மத்தியபிரதேச மாநிலம் மன்சூரில் 45 வயது பெண் ஒருவர் லாரி பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். கணவர் செய்துவந்த மெக்கானிக் தொழிலை அவரது இறப்புக்கு பின் இந்த பெண் கையில் எடுத்துள்ளார். லாரியின் ராட்சத டயர்களை ஆண்களுக்கு நிகராக புரட்டி வந்து சரி செய்து கொடுக்கும் அவர், அப்பகுதியில் பலரும் பாராட்டும் பெண்ணாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அப்பகுதி மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து சென்றனர்.
Next Story