"நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிடும் உத்தரவு நிறுத்தம்" - டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் நாளை தூக்கிலிடும் உத்தரவை நிறுத்தி வைத்து விசாரணை நீதிமன்றமான டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் நாளை தூக்கிலிடும் உத்தரவை நிறுத்தி வைத்து விசாரணை நீதிமன்றமான டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவனான பவன்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், நீதிபதி தர்மேந்திரா ராணா அமர்வு முன் நடைபெற்றது. பவன் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங், பவன்குமார் கருணை மனு குடியரசுத் தலைவர் முன் நிலுவையில் இருப்பதாகவும், இந்தநிலையில்  மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது என்றும் கூறினார். திகார் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  தண்டனை நிறைவேற்றும் தேதி நெருங்கிவிட்டதால்,  தற்போதைய நிலையில் தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்கும்  அதிகாரம்  டெல்லி அரசுக்கே உள்ளது என்றார். மேலும், டெல்லி அரசு முடிவெடுத்த பின்னரே இந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றம் தலையிட முடியும் என்றும் கூறினார். இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி தர்மேந்திர ராணா, நிர்பயா குற்றவாளிகள் நால்வரை நாளை தூக்கிலிட பிறப்பித்த உத்தரவை  மறு தேதி அறிவிக்கும் வரை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வரை ஓயமாட்டேன் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்