டெல்லி வன்முறை- உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
டெல்லியில் வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை தவறி விட்டதாக உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வன்முறை தொடர்பான வழக்குக்கும், ஷாகின்பாக்
போராட்டம் தொடர்பான வழக்கிற்கும் சம்மந்தமில்லை என்றார். மேலும், வன்முறை தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள், டெல்லி காவல்துறையின் மெத்தனப்போக்கு தான் பிரச்சனை இந்த அளவிற்கு பெரிதாக உருமாறி இருப்பதற்கான காரணம் என்றனர். மேலும் வன்முறை வெடித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, எதற்காக காத்திருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினர். நிலைமையை ஏன் இந்த அளவிற்கு கை மீறி போகவிட்டீர்கள் என காட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story