மணிப்பூர் பொதுத் தேர்வில் சர்ச்சை கேள்விகள் : நேருவின் எதிர்மறை பண்புகள் பற்றி விளக்குக..?
மணிப்பூரில், மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் எதிர்மறை பண்புகள் பற்றி பதில் எழுதுமாறு பொதுத்தேர்வு கேள்விதாளில் கேட்கப்பட்டு இருந்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
12ம் வகுப்பு மாநில பொதுத் தேர்வின், பொலிடிக்கல் சயின்ஸ்
பாட பிரிவில் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மற்றொரு 4 மதிப்பெண் கேள்விக்கு பாஜகவின் சின்னத்தை வரையுமாறு கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில கல்வி குழு தலைவர் எல்.மஹேந்திர சிங்கிடம் கேட்ட போது , பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டதாக அவர் தெரிவித்ததால் , இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
Next Story