ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவிகள்: டிவிட்டரில் ராகுல் காந்தி - மீனாட்சி லேகி எம்.பி. கருத்து மோதல்
ராணுவத்தில் பெண்களை உயர்பதவி வழங்குவது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஆண்களை விட பெண்கள் வலிமை குறைந்தவர்கள் என நீதிமன்றத்தில் கூறி, ஒவ்வொரு இந்திய பெண்ணையும் அவமானப்படுத்தி விட்டதாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் பெண்களை உயர்பதவி வழங்குவது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஆண்களை விட பெண்கள் வலிமை குறைந்தவர்கள் என நீதிமன்றத்தில் கூறி, ஒவ்வொரு இந்திய பெண்ணையும் அவமானப்படுத்தி விட்டதாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்பி மீனாட்சி லேகி, ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர ஆணையம் மற்றும் உயர்பதவிகள் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, அதை எதிர்த்து காங்கிரஸ் அரசு தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, கடுமையாக வாதிட்டது என்றும், ராகுல் காந்தி ஞாபக சக்தியை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story