நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் தேதி தூக்கு

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ஆம் தேதி, காலை 6 மணிக்கு தூக்கிலிட, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்க கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றவாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட சட்ட நிவாரணங்கள் குறித்தும், புதிய தேதி அறிவிப்பதில் எந்த தடையும் இல்லை என்பது குறித்தும் வாதங்களை முன் வைத்தார். இதை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் விருந்தா குரோவர், தான் முகேஷின் வழக்கறிஞராக தொடர அவர் விரும்பவில்லை என தெரிவித்தார்.குற்றவாளி அக்ஷய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  கருணை மனு முழுமையாக இல்லை என்பதால், முழுமையான புதிய மனு தாக்கல் செய்யப்படவுள்ளது என்றார். குற்றவாளி பவனுக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவையும், கருணை மனுவை மீண்டும் அனுப்பி வைக்கவும் பவன் விரும்புவதாக தெரிவித்தார். தொடர்ந்து வாதங்களை பதிவு செய்த நீதிபதி தர்மேந்திர ராணா, நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ஆம் தேதி, காலை 6 மணிக்கு தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தார். 


Next Story

மேலும் செய்திகள்