இந்தியாவில் கொரோனா பாதிப்பு - உயர் அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இதுவரை 326 விமானங்களில் வந்த 52 ஆயிரத்து 332 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர்களில் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என மருத்துவ சோதனை நடத்தியதில் யாருக்கும் பாதிப்பில்லை என கண்டறியப்பட்டதாகவும் சீனாவின் உகான் மாகாணத்திலிருந்து 324 இந்தியர்கள் தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு 104 பேர் சால்வா முகாமிலும், 220 பேர் மானேசரிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இந்தியா வந்த உத்தரகாண்டை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் அப்பெண் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலும் மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story