"ஆம்புலன்ஸ்க்காக 12 கி.மீ தூரம் ஒருவரை தூக்கி வந்த இளைஞர்கள்"
ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாததால் கையில் தூக்கி வந்த அவலம்
ஆந்திராவில் உடல்நலம் பாதிக்கப்பட்டவரை, ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்காக, 12 கிலோ மீட்டர் தூரம் இளைஞர்கள் தூக்கி சென்றனர். விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள தாரபரட்டி என்ற கிராமத்திற்கு, ஆம்புலன்ஸ் கூட செல்ல வழியில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை தொட்டில் கட்டி தூக்கிய இளைஞர்கள், 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆம்புலன்ஸில் ஏற்றினர்.இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை தாண்டிய நிலையில், இன்னும் சில ஊர்களுக்கு சாலை வசதி இல்லை என்பதை இந்த காட்சி உணர்த்துகிறது.
Next Story