அத்தை வீட்டிற்கு தீ வைத்த இளைஞர் - திருமணத்திற்கு பெண் கொடுக்காததால் வெறிச்செயல்

திருப்பதி அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால், அத்தை வீட்டிற்கு தீ வைத்ததில், இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அத்தை வீட்டிற்கு தீ வைத்த இளைஞர் - திருமணத்திற்கு பெண் கொடுக்காததால் வெறிச்செயல்
x
கோதாவரி மாவட்டம்  துல்லா கிராமத்தை சேர்ந்த சீனிவாஸ், அதே பகுதியில் உள்ள தனது அத்தை சத்தியவதி மகளை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். காதலை தனது பெற்றோர் மற்றும் அத்தையிடம் கூறிய நிலையில், சத்தியவதி குடும்பத்தினர்  தனது மகளை, வேறு ஒருவருக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், சத்தியவதியை கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் சத்தியவதி நேற்று இரவு உறவினர்களுடன்  வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அங்கு சென்ற சீனிவாசன், வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 4 பேர் தீகாயம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்