"தமிழ், ஆங்கிலம் மட்டுமே எங்கள் மொழி என்றோம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மத்திய அரசை எதிர்த்து தமிழ் ​மொழிக்கு புதுச்சேரி அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
தமிழ், ஆங்கிலம் மட்டுமே எங்கள் மொழி என்றோம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
புதுச்சேரி தமிழ்ச் சங்க வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், சின்னஞ் சிறிய மாநிலமான புதுச்சேரி தமிழை வளர்ப்பதில், முனைந்து செயல்படுவதாக கூறினார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக விவாதிக்க, மாநில கல்வி அமைச்சர்களுக்கு மத்திய அரசு நடத்திய கூட்ட​த்தில் புதுச்சேரியில் இருந்து அமைச்சர் கமலக்கண்ணன் பங்கேற்றதாகவும், தமிழகத்தில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்