"சபரிமலை வழக்கு - 3 வாரம் அவகாசம்"
சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தெரிவித்துள்ளார்.
சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் மீதான மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சபரிமலை வழக்கில், சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை எனவும், மத, வழிபாட்டு உரிமைகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட குறிப்புகளை விசாரிக்க உள்ளோம் எனவும் பாப்டே தெரிவித்தார்.
மேலும், பெண்கள் கோவிலுக்குள், மசூதிக்குள், பார்சிக்களின் வழிபாட்டு தளங்களில் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா என்பதை, தாம் கேட்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
அப்போது, இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் மனுதாக்கல் செய்யவும் வாதங்களை முன்வைக்கவும், வழக்கறிஞர்கள் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.
அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி,
எந்த வழக்கறிஞருக்கும் கூடுதல் கால அவகாசம் கொடுக்க முடியாது எனவும் தேவையில்லாத வாதங்களையும் கேட்க முடியாது என்றும் கூறினார்.
வாதாடவுள்ள வழக்கறிஞர்கள் தங்களுக்குள்ளாகவே கலந்து பேசி யார், யார் எவ்வளவு நேரம், எதை குறித்த வாதங்களை முன் வைக்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும் எனவும் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
இது வெறும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விஷயம் அல்ல எனவும் அனைத்து மதத்திலும் இருக்க கூடிய விஷயங்களையும் விசாரிக்க உள்ளதாகவும் பாப்டே அப்போது தெரிவித்தார்.
சபரிமலை மறுஆய்வு மனுக்களை விசாரித்த 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு என்ன என்ன கேள்விகளை எழுப்பியதோ அது குறித்து மட்டுமே விசாரணை நடத்தப்படும் எனவும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து அனைத்து தரப்பும் பதில் அளிக்க 3 வாரம் அவகாசம் அளிக்கப்படுவதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக வரும் 17 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story