ஆங்கில புத்தாண்டு - பாதுகாப்பு ஏற்பாடு : 2 கி.மீ. நடந்து சென்று ஆளுநர் கிரண்பேடி ஆய்வு

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரவு நேரத்தில் சுமார் 2 கி.மீ நடந்து சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார்.
ஆங்கில புத்தாண்டு - பாதுகாப்பு ஏற்பாடு : 2 கி.மீ. நடந்து சென்று ஆளுநர் கிரண்பேடி ஆய்வு
x
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரவு நேரத்தில் சுமார் 2 கி.மீ நடந்து சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார். புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து, சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக, புதுச்சேரி கடற்கரையில் அதிகளவிலான மக்கள் கூடுவார்கள் என்பதால், அவர்களுக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து , துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார். கடற்கரை சாலையில் இரவு நேரத்தில் சுமார் 2 கி.மீ தூரம் நடந்து சென்ற அவர், அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்