ஆங்கில புத்தாண்டை வரவேற்க தயாராகும் புதுச்சேரி
ஆங்கில புத்தாண்டை வரவேற்பதற்காக புதுச்சேரி அரசு மற்றும் ஓட்டல்கள் மது விருந்துடன் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையிலிருந்து புத்தாண்டு வரை புதுச்சேரியில் தங்குவதற்காக சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கவும் கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கை, மது விருந்து, பல்சுவை விருந்து உள்ளிட்ட பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு புதுச்சேரி அரசின் சுற்றுலா துறையும், தனியார் ஓட்டுல் நிர்வாகங்களும் ஏற்பாடு செய்து வருகின்றன. கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கான கட்டணம் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நட்சத்திர ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் தற்போது 90 சதவீத அறைகள் முன் பதிவாகியுள்ளன.புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் எவ்வித சிரமுமின்றி கடற்கரை சாலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக வரும் 31 ஆம் தேதி மாலை 6 மணி முதல் போக்குவரத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story