புதுச்சேரி மத்திய சிறையில் அதிரடி சோதனை

புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகள் அறையில் இருந்து 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மத்திய சிறையில் அதிரடி சோதனை
x
புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகள் அறையில் இருந்து 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலாப்பட்டு மத்திய சிறையில் நடைபெற்ற சோதனையில், மறைத்து வைத்திருந்த 11 செல்போன்கள், சிம்கார்டு, சார்ஜர் ஆகியவற்றை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, காலாப்பட்டு காவல் நிலையத்தில், சிறை கண்காணிப்பாளர் கோபிநாத் புகார் தெரிவித்தார். இதன் பேரில், பறிமுதல் செய்யபட்ட செல்போன்களை பயன்படுத்தியது யார்? எப்படி உள்ளே வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த 8ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில்,  5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்