ராஜஸ்தானில் மயில்களுக்கு விஷம் வைத்த விவசாயி கைது
ராஜஸ்தானில், விவசாயி ஒருவர் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில், விவசாயி ஒருவர் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. SERUNA கிராமத்தை சேர்ந்த விவசாயி தினேஷ் குமார், தனது நிலத்தில், மயில்கள் பயிர்கள் சேதம் செய்வதை தடுக்க உணவில் விஷம் கலந்து வைத்துள்ளார். உணவை உண்ட 23 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்தன. தகவலறிந்து வந்த போலீஸார் தினேஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story