"கல்கி பகவான் குடும்ப பினாமி சொத்து முடக்கம்"
கல்கி பகவான் விஜயகுமாருக்கு சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை, பினாமி சொத்து பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளது
* ஆந்திராவில் உள்ள கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் சொந்தமான இடங்களில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
* இதில் 800 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
* மேலும் 4 ஆயிரம் ஏக்கர் சொத்துக்களின் ஆவணங்களை தவிர, 44 கோடி ரூபாய் ரொக்கம், 90 கிலோ தங்கம், 20 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
* மேலும், துபாய், ஆப்பிரிக்கா, பிரிட்டன் விர்ஜின் தீவுகளில் 100 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.
* விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, அவரது மனைவி ப்ரித்தா ஆகிய இருவரும் பினாமி பெயரில் சொத்து வாங்கி குவித்திருப்பதும் தெரிய வந்தது.
* இதையடுத்து, முதற்கட்ட நடவடிக்கையாக 907 ஏக்கர் நிலத்தை, பினாமி பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளனர்.
* இந்த சொத்துகள் அனைத்தும் ஆசிரமத்தின் பக்தர்கள், அவர்கள் நடத்தி வரும் ஆன்மீக பள்ளியின் ஊழியர்களின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது.
* இவை, விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி ப்ரீதா ஆகியோர் மூலம் வாங்கப்பட்டு பினாமிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
* தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சத்தியவேடு, கோவை, ஊட்டி, பெல்காம் ஆகிய இடங்களில் சொத்துக்கள் முடக்கப்பட்டு, அது குறித்த விவரங்கள் நில பதிவு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Next Story