"நித்தியானந்தா பிடதி ஆசிரமத்தின் மீது மற்றொரு வழக்கு"

ஆட்கொணர்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்ப்பு
நித்தியானந்தா பிடதி ஆசிரமத்தின் மீது மற்றொரு வழக்கு
x
நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்ட விரோதமாக  அடைத்து வைக்கப்பட்டுள்ள பிராணாசாமி என்பவரை மீட்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம்  என்பவர், கடந்த 2003 ஆம் ஆண்டு நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார். அங்கு பிராணாசாமி என்று பெயர் மாற்றப்பட்ட அவரை சமீபகாலமாக ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் பார்க்க அனுமதிப்பதில்லை என அவரது தாயார் அங்கம்மாள் ஆட்கொணர்வு மனுவைத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்