தொழில் செய்ய உகந்த நாடுகள் - இந்தியாவுக்கு 63-வது இடம்
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் 21778 நிறுவனங்களுக்கு அங்கீகாரம்
* தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகள் பற்றிய உலக வங்கியின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
* உலகில் உள்ள 190 நாடுகள் இடம் பெற்றுள்ள அந்த பட்டியலில் கடந்த ஆண்டு 77 இடத்தில் இருந்த இந்தியா 13 இடங்கள் முன்னேறி தற்போது
63-வது இடத்திற்கு வந்துள்ளது.
* புதுமைகளை புகுத்தும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா 52-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் இதுவரை 21778 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
* ஏற்றுமதியை ஊற்றுவிக்க வர்த்தகத்துறை மேற்கொண்ட நிர்விக் என்ற புதிய ஏற்றுமதி கடன் காப்பீட்டு திட்டம், தேசிய போக்குவரத்து கொள்கை, வேளாண் ஏற்றுமதி கொள்கை , அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிப்பு உள்ளிட்ட முன்முயற்சிகளே, இந்தியாவின் முன்னேற்றத்துக்கு காரணம் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story