"பொது சொத்துகளை சூறையாடினால் கண்டதும் சுட உத்தரவு" - ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி எச்சரிக்கை
"ரயில்வே சொத்துகளை சூறையாடினாலும் சுடுமாறு அறிவுரை"
குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பான போராட்டத்தில், பொது சொத்துகள் சூறையாடப்படுவது தொடர்பாக, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், ரயில்வே உள்ளிட்ட பொது சொத்துகளை யாரேனும் சூறையாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அமைச்சர் என்ற முறையில் ரயில்வே சொத்துகள் சூறையாடினால் கண்டதும் சுடுமாறு அறிவுறுத்தி இருப்பதாகவும் சுரேஷ் அங்காடி கூறினார்.
Next Story