ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்க திட்டம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தகவல்

ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்களை அமைப்பதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்க திட்டம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தகவல்
x
ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்களை அமைப்பதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இடங்களை செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த குழு ஆய்வு செய்து 2 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள அனைத்து பகுதிகளையும் வளர்ச்சி அடைய செய்வதற்காக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஆந்திராவிற்கு, 3 தலைநகரங்களை அமைப்பது பற்றி  யோசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று சட்டமன்ற தலைநகராகவும், மற்ற இரண்டும் நிர்வாக மற்றும் நீதிமன்ற தலைநகராகவும் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி, விசாப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், கர்னூல் நீதிமன்ற தலைநகராகவும் அமையும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுளள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்